

திரு. ராணா அஷ்டோஷ் குமார் சிங்
இயக்குநர்
திரு, ராணா அஸ்டோஷ் குமார் சிங் பாரத ஸ்டேட் வங்கியில் துணை நிர்வாக இயக்குநராக (பரிவர்த்தனை வங்கி மற்றும் புதிய முயற்சிகள்) இருந்தவர். அந்த வங்கியில் 1991 ஆம் ஆண்டு பயிற்சி அதிகாரியாக சேர்ந்தார். ஆழ்ந்த கள நிபுணத்துவம், விரிவான அறிவும் உடையவர். ரீட்டைல் வங்கி, கடன், மனித வளங்கள், சர்வதேச வங்கி மற்றும் டிஜிட்டல் & பரிவர்த்தனை வங்கித் துறையில் தலைமை ஏற்று நடத்தி 30 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் பெற்றவர். அவர் இந்தியாவிலும் வெளிநாட்டிலும் (ஜெர்மனி) பல்வேறு பதவிகளிலும் பல இடங்களிலும் பணியாற்றியுள்ளார்.
DMD (பரிவர்த்தனை வங்கி மற்றும் புதிய முன்முயற்சிகள்) என்ற அவர் தற்போது வகித்துவரும் பதவியில், பரிவர்த்தனை வங்கி, அரசாங்க வணிக உறவுகள் மற்றும் செயல்நெறிமுறை வகுத்தல் & புதிய வணிக மேம்பாடு மற்றும் செயல்முறை முன்முயற்சிகள் தலைவராக உள்ளார்.
கடந்த காலத்தில் அவர் வகித்த முக்கிய பதவிகள் வருமாறு: துணை நிர்வாக இயக்குநர் (உத்தி) & தலைமை டிஜிட்டல் அதிகாரி மற்றும் துணை நிர்வாக இயக்குநர் (மனித உறவு) & கார்ப்பரேட் மையத்தில் கார்ப்பரேட் மேம்பாட்டு அதிகாரி, தலைமை பொது மேலாளர், சண்டிகார் லோக்கல் தலைமை அலுவலகம் மற்றும் தலைமை நிர்வாக அதிகார், ஃபிராங்ஃபர்ட் கிளை, ஜெர்மனி.
இவர் இன்டியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் பேங்கர்ஸின் ஸெர்ட்டிஃபைடு அசோசியேட் சான்று பெற்றவர். மும்பை எஸ்.பி. ஜெயின் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மென்ட் & ரிசர்ச் நிறுவனத்தின் எம்பிஏ (பிஜிஇஎம்பி) பட்டம் பெற்றவர். ஹார்வர்ட் பிசினஸ் ஸ்கூல் மற்றும் ஹைதராபாத்தில் உள்ள இந்தியன் ஸ்கூல் ஆஃப் பிசினஸ் ஆகியவற்றில் தலைமை மேம்பாட்டுத் திட்டத்திலும் கலந்துகொண்டார்