

திரு. ஷம்ஷேர் சிங், துணை நிர்வாக இயக்குநர்
(பரிமாற்ற வங்கித்துறை மற்றும் புதிய முயற்சிகள்)
திரு. ஷம்ஷேர் சிங் நவம்பர் 2024 முதல் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவில் துணை நிர்வாக இயக்குநர் (TB&NI) பதவியை வகித்து வருகிறார்.
திரு. சிங் 1990 ஆம் ஆண்டு தில்லி வட்டத்தில் SBI-யில் பயிற்சிகால அதிகாரியாக தனது வாழ்க்கையைத் தொடங்கினார்.
அவரது கல்வித் தகுதி வணிகத்தில் இளங்கலை (தில்லி பல்கலைக்கழகம்), செர்ட்டிஃபைடு அசோசியேட், (இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் பேங்கர்ஸ்) மற்றும் செர்ட்டிஃபைடு ஆன்டி மனி லாண்டரிங் நிபுணர் (ACAMS) ஆவார்.
அவர் இந்தியாவிலும் வெளிநாட்டிலும் பல்வேறு இடங்களில் பல்வேறு
வணிக செயல்பாடுகளுக்குத் தலைமை தாங்கி பணியாற்றினார். டிரஷரி செயல்பாடுகள், ரீடைல் பேங்கிங், கட்டமைக்கப்பட்ட தயாரிப்புகள் மற்றும் அந்நிய செலாவணி டீலிங் போன்ற வங்கியின் பல்வேறு பகுதிகளைக் கையாள்வதிலும் நிர்வகிப்பதிலும் அவருக்கு நல்ல அனுபவம் உள்ளது.
டிஎம்டி (DMD) (TB&NI) பதவிக்கு உயர்த்தப்படுவதற்கு முன் திரு.சிங் நவம்பர் 2022 முதல் நவம்பர் 2024 வரை எஸ்பிஐ ஃபண்ட்ஸ் மேனேஜ்மெண்ட் லிமிடெடுக்குத் தலைமை தாங்கினார். நவம்பர் 2020 முதல் நவம்பர் 2022 வரை தலைமைப் பொது மேலாளராக அகமதாபாத் வட்டத்திலும் பணியாற்றினார்.
ஒரு வட்டத் தலைவராக, குஜராத் மாநிலம் மற்றும் டாமன் மற்றும் டையூ முழுவதும் உள்ள ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவின் 1400+ கிளைகளில் வணிக வளர்ச்சியை முன்னெடுப்பதற்கும் ஒழுங்குமுறை இணக்கத்தை உறுதி செய்வதற்கும் அவர் பொறுப்பேற்றார். மேலும் 11,000+ ஊழியர்களை நிர்வகிக்கும் ஒட்டுமொத்தப் பொறுப்பையும் வகித்தார்.
கடந்த 10 ஆண்டுகளில் எஸ்பிஐ-யில் திரு. சிங் வகித்த பிற முக்கிய பதவிகள் பின்வருமாறு:
எஸ்பிஐ-யின் ஃபைனான்சியல் இன்ஸ்டிடியூஷன்ஸ் குரூப்புக்குத் (FIG) தலைமை வகித்துக் கூடுதல் பொறுப்பாக 2019-20 ஆம் ஆண்டிற்கான எஸ்பிஐ-யின் டிரஷரி ஆஃப் ஃபாரின் ஆஃபீஸ்களின் தலைவர் பதவியை வகித்தார்.
எஸ்பிஐ-யின் மத்திய கிழக்கு, மேற்கு ஆசியா, வட ஆப்பிரிக்கா, மாலே, தென்னாப்பிரிக்கா ஆகியவற்றின் பிராந்தியத் தலைவராகப் பணியாற்றினார் - 2018-19.
2014-2017 வரை பஹ்ரைனில் உள்ள எஸ்பிஐ செயல்பாடுகளின் கன்ட்ரி ஹெட் ஆகவும் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் பணியாற்றினார்.
2012-13 முதல் டிரஷரித் துறையின் கார்ப்பரேட் மையத்தில் தலைமை டீலராக (ரூபாய் சந்தைகள்) பணியாற்றினார்.
2009-11 ஆம் ஆண்டில் டிரஷரி துறை, கார்ப்பரேட் மையத்தில் தலைமை டீலராக, கட்டமைக்கப்பட்ட தயாரிப்புகள் (டெரிவேட்டிவ்ஸ்) பணியாற்றினார்.
1998-2002 காலகட்டத்தில் எஸ்பிஐ நியூயார்க்கில் டீலராகப் பணியாற்றினார்