NBBL இணையவழி வணிகச் சேவைகள்

ONDC க்காக பாரத் பில்பே வழங்கும் தனிப்பயனாக்கபட்ட தீர்வே NOCS. பாதுகாப்புள்ள பத்திரமான பரிமாற்றங்களைச் செயல்படுத்துவதன் மூலம் இந்தியாவின் இ-காமர்ஸ் பரவவலை மேம்படுத்தும் ONDC-யின் நோக்கத்துக்கு இதன் மூலம் பாரத்பில்பே துணைநிற்கிறது.

லைவ் பார்ட்னர்

  • ONDC

அம்சங்கள்

  • மக்கள்தொகை அளவிற்கேற்ற ஒரு தளம்

    நெட்வொர்க் முழுவதும் வெவ்வேறு பங்கேற்பாளர்களால் தொடங்கப்பட்டுள்ள மக்கள் தொகை அளவிலான பரிமாற்றத் தொகுதிகளைச் சமாளிக்கும் நோக்கத்தோடு இந்தத் தளம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

  • பாதுகாப்பான சிக்கலில்லாத பரிமாற்றங்கள்

    NOCS தளத்தில் நடைபெறும் அனைத்து பணம்செலுத்துதல்களின் பாதுகாப்பு மற்றும் செல்லுபடியாகும் தன்மையை நெட்வொர்க்கில் பங்கேற்பவர்களின் துல்லியமான ஆன்போர்டிங் செயல்முறை உறுதி செய்கிறது.

  • பலவகைப்பட்ட நிறுவனங்களை ஆதரிக்கிறது

    வங்கிகள், இ-காமர்ஸ் தளங்கள், தொழில்நுட்ப சேவை வழங்குநர்கள் ஆகியவற்றை உள்ளிட்ட பல நிறுவனங்களுக்கான ஒருங்கிணைப்பை இந்தத் தளம் வழங்குகிறது.

  • தீர்வுகளின் தடையற்ற இணக்கம்

    ஒவ்வொரு தீர்வுக்கும் வங்கிகள், ரிசர்வ் வங்கி, RSP-களுக்கு பகிரப்பட்டுள்ள பொதுவான குறிப்பு எண் பங்குதாரர்களுக்கு இடையில் தடையற்ற நல்லிணக்கத்தை செயல்படுத்துகிறது.

  • விரைவான தீர்வு உறுதிப்படுத்தப்படுகிறது

    RBI இணையதளத்தில் பதிவிடப்பட்டுள்ள பலதரப்பு நிகரத் தீர்வுத் தொகுதிக் கோப்பு (Multilateral Net Settlement Batch file) மூலம் ஒவ்வொரு தீர்வும் எட்டப்படுகிறது

நன்மைகள்

  • ரிசர்வ் வங்கியால் ஒழுங்குபடுத்தப்படும் ஒரு நிறுவனத்தின் மூலம் எதிர் தரப்புகளுக்கு தடையற்ற தீர்வுகள்

  • ONDC தொடர்பான அனைத்து தீர்வுகளுக்கும் ஒரே தொடர்புப் புள்ளி வங்கிகளுக்கு

இது எப்படி வேலைசெய்கிறது

NBBL ONDC நெட்வொர்க்கில் தீர்வு முகமையமாக NBBL செயல்படுகிறது. (எடுத்துக்காட்டு/படம்)

Diagram illustrating how NBBL operates as a Settlement Agency on the ONDC network, enabling transactions between buyer-side applications, seller-side applications, gateways, logistics providers, and other service providers within the ONDC ecosystem.