வீடு / அறிமுகம் / போர்டு இயக்குநர்கள் / திலிப் ஆஸ்பே

திரு. திலிப் ஆஸ்பே

இயக்குநர்

திரு ஆஸ்பே அதிக திறன் கொண்ட தளங்களையும் NPCI க்காக ஒரு வலுவான குழுவையும் உருவாக்கியுள்ளார், அவை ஒரு நாளைக்கு 30 மில்லியன் பரிவர்த்தனைகளைச் செயல்படுத்துகின்றன. இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) அமைத்த (பாரத் கனெக்ட் சிஸ்டம் அமைத்தல் - 2014, மொபைல் வங்கிக்கான தொழில்நுட்பக் குழு - 2013, கார்டு பிரசெண்ட் பரிவர்த்தனைகளைப் பாதுகாப்பதற்கான பணிக்குழு - 2012 போன்ற முக்கிய குழுக்கள். ) மற்றும் இந்திய அரசு அமைத்த பல்வேறு குழுக்களிலும் அங்கம் வகித்துள்ளார்.

இவர் கடந்த 20 ஆண்டுகளாக ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் நிதிச் சேவைகள்/கட்டணச் சூழல் அமைப்பில் வலுவான நெட்வொர்க்கைப் பராமரித்து வந்துள்ளார். PCI DSS, ISO 9001, ISO 22301 வணிகத் தொடர்ச்சி மேலாண்மை அமைப்பு (BCMS) மற்றும் ISO 27001:2013 தகவல் பாதுகாப்பு மேலாண்மை அமைப்பு (ISMS), இயக்க செயல்முறைகள் மற்றும் பல்வேறு பேமெண்ட் சிஸ்டம்ஸ்களுக்கான லைஃப் சைக்கிள் மேலாண்மை போன்ற தரநிலைகள் பற்றிய விரிவான அறிவு அவருக்கு உள்ளது.

ஆசியா பசிபிக் பிராந்தியத்திற்காக உலகளாவிய யூரோநெட்டின் உள்கட்டமைப்பை அமைப்பது மற்றும் இந்தியாவில் பிரிஸ்ம் பேமெண்ட்ஸ் சர்வீச்ஸை அமத்தது போன்ற முக்கிய சாதனைகள் அவருக்கு உண்டு. விநியோகத்திற்கான உள்கட்டமைப்பை உருவாக்குதல் மற்றும் உலகளாவிய மேம்பாட்டு மையத்தை அமைப்பது ஆகியவை இதில் அடங்கும். யூரோனெட் ஆசியா பசிபிக் சி.டி.ஓ.வாக பணியாற்றுவதற்கு முன், மும்பை பங்குச் சந்தையில் (பி.எஸ்.இ) மென்பொருள் புரோகிராமராக இவர் தனது வாழ்க்கையைத் தொடங்கினார்.

யுனைட்டட் கிங்க்டம், லண்டனில் இருக்கும் லண்டன் ஸ்கூல் ஆஃப் எக்கனாமிக்ஸ் அன்ட் பொலிட்டிக்கல் சயின்ஸ் (LSE) இல் இருந்து மாஸ்டர் ஆஃப் சயின்ஸ் (MSc) பட்டத்தை மெரிட்டோடு பெற்றார். மும்பை பாந்த்ரா, ஃபாதர் ஏஞ்சல்ஸ் ஆஷ்ரமில் இருக்கும் ஃபாதர் கான்சியாகோ ரோட்ரிக்ஸ் கல்லூரியில் பேச்சுலர் ஆஃப் இஞ்சினியரிங் (BE) பட்டத்தை டிஸ்டிங்ஷனோடு பெற்றார்.