எங்கள் மிஷன்

நாட்டில் கல்வித் தரத்தை மேம்படுத்துதல், வேலைவாய்ப்பை அதிகரித்தல் நிதி சார்ந்த கல்வியை வளர்த்தல்.

எங்கள் விஷன்

பெண்களை அதிகாரப்படுத்துதல் சுற்றுச்சூழலைப் போற்றிப் பாதுகாத்தல் பேரிடர்களில் இருந்து மீள்திறன் கொண்ட சமுதாயம்.

கவனம் செலுத்தும் பகுதிகள்

  • Focus areas - கல்வி மற்றும்
வாழ்வாதாரம்

    கல்வி மற்றும் வாழ்வாதாரம்

    இந்தியாவின் பின்தங்கிய மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூகங்களீன் கல்வி மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்த, இந்தியாவின் முன்னணி NGO க்களுடன் நாங்கள் இணைந்து செயல்படுகிறோம். குழந்தைகளின் கல்வித் திறனை மேம்படுத்தும், பள்ளிகளில் குழந்தைகளின் சேர்க்கை மற்றும் தக்கவைப்பு விகிதத்தை மேம்படுத்தும் மற்றும் வேலையற்ற இளைஞர்களுக்கு நிலையான வாழ்வாதார வாய்ப்புகளை உருவாக்கும் பாதுகாப்பான மற்றும் முழுமையான சூழலை உருவாக்க நாங்கள் முயற்சி செய்கிறோம்.

  • Focus areas - சுற்றுச்சூழல்
நிலைத்தன்மை

    சுற்றுச்சூழல் நிலைத்தன்மை

    இந்தியாவின் வளமான பல்லுயிர் வகைகளைப் பாதுகாக்க, காடுகளைச் சார்ந்துள்ள சமூகங்களை அவற்றின் வாழ்வாதாரத்திற்காக மேம்படுத்துதல், நிலையான மற்றும் திறன் மிக்க இயற்கை வள மேலாண்மையை உறுதி செய்தல், சுற்றுச்சூழல் சவால்களைத் தணிக்கும் அளவுகோல்களை உருவாக்குதல் மற்றும் மனித-விலங்கு மோதலைக் குறைப்பதற்காக வனவிலங்குகளுடன் இடங்களைப் பகிர்ந்து கொள்ளும் சமூகங்களுக்கு நிலையான வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளோம்.

  • Focus areas - மனிதாபிமான
உதவி

    மனிதாபிமான உதவி

    நெருக்கடியான சூழ்நிலைகளில் பாதிக்கப்படக்கூடிய சமூகங்கள் மற்றும் அரசு நிறுவனங்களுக்கு ஆதரவாக நிற்பதை நாங்கள் நம்புகிறோம். முன்னெப்போதும் இல்லாத கோவிட்-19 பெருந்தொற்றின் போது, முன்னணி அரசு சாரா நிறுவனங்களுடன் இணைந்து கோவிட்-நிவாரண முயற்சிகளுக்கு நாங்கள் ஆதரவளித்ததோடு பங்கும் அளித்தோம்.

வரலாறு

தொடக்கத்தில் இருந்தே பாரத் கனெக்ட் நிறுவனச் சட்டம், 2013க்கு இணங்க சமூகப் பங்களிப்பு திட்டங்களை உருவாக்க முயன்றது. துறைசார் நிபுணத்துவம் மற்றும் கண்டுபிடிப்புகளால் இயக்கப்படும் இந்தியாவின் முன்னணி சமூக மேம்பாட்டு நிறுவனங்களுடனான எங்கள் பங்காண்மை எங்கள் உறுதியை வலுப்படுத்தி, இந்தியா முழுவதும் உள்ள தாழ்த்தப்பட்ட சமூகங்கள் மத்தியில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்த உதவியது.

எங்கள் திட்டங்கள்

  • Custom Solution
  • Custom Solution
  • Custom Solution

எங்கள் பங்குதாரர்கள்

  • ஓரியன் கல்விச் சங்கம் என்பது சமூகத்தின் அனைத்துப் பிரிவுகளிலும் உள்ளடக்கிய வளர்ச்சியை உருவாக்கும் தொலைநோக்குப் பார்வையுடன் கூடிய திறன் மேம்பாட்டு அமைப்பாகும். இந்தியா முழுவதும் 29 க்கும் மேற்பட்ட மாநிலங்களில் செயல்படும் ஓரியன் கல்விச் சங்கம், விளிம்புநிலை சமூகங்களைச் சேர்ந்த வேலையற்ற இளைஞர்களுக்கு பல்வேறு வேலை வாய்ப்புகளை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்ட மிகப்பெரிய திறன் மேம்பாட்டு நிறுவனங்களில் ஒன்றாகும். தொழில்நுட்பம், மின்னணுவியல், பயணம் மற்றும் சுற்றுலா, சில்லறை விற்பனை, நெட்வொர்க்கிங், விருந்தோம்பல், விவசாயம், மொபைல் மடிக்கணினி பழுதுபார்ப்பு, சுகாதாரப் பராமரிப்பு, ஆடை உற்பத்தி மற்றும் வடிவமைப்பு, மற்றும் இது போன்ற பல்வேறு துறைகளில் நிலையான வாழ்வாதார வாய்ப்புகளை உருவாக்குவதில் கவனம் செலுத்துகிறது.

  • ஐஐடி கரக்பூர் கட்டடவியல் கலைஞர்களால் நிறுவப்பட்ட ஓர் இலாப நோக்கற்ற அமைப்பே ஆந்தில் கிரியேஷன்ஸ் ஆகும். இது உள்ளூர் மூலப்பொருட்களைப் பயன்படுத்தி மரபும் தொழில்நுட்பமும் இணைந்த நிலையான விளையாட்டு மைதானங்களாக மாற்றி குழந்தைகளின் முழுமையான வளர்ச்சிக்கு உதவுகிறது. அதே நேரத்தில் அதிகப்படியான சூழல்மாசைத் தடுக்கிறது. 5 ஆண்டுகளுக்கும் மேலாக, 210 டன் டயர்களை மறுசுழற்சி செய்வதன் மூலமும், இந்தியாவில் 20 மாநிலங்களில் 2,00,000+ குழந்தைகளைச் சென்றடைவதன் மூலமும் இந்தியா முழுவதும் 320 விளையாட்டு மைதானங்களை உருவாக்குவதில் பல்வேறு நிறுவனங்களுடன் அவர்கள் ஒத்துழைத்து வருகின்றனர்.

  • The Learning Links Foundation is a not-for-profit trust established in 2002 with a vision to foster purpose and progress by unlocking lifelong learning. Powered by its vision to inspire true learning from an early age, the foundation offers educational, training, skilling and self-enhancement solutions that create learning links throughout life across all age groups while harnessing knowledge, innovation and technology. LLF has positively impacted over 17.8 million students and 2.2 million teachers across over 52,000 schools.

கொள்கை

  • பங்குதாரராகுங்கள்

    சரியான மொபைல் எண்ணை உள்ளிடவும்.