-
தங்கள் சொந்த அவுட்லெட்டுகளையும் வலைத்தளங்களையும் பில்லர்கள் உருவாக்க வேண்டியதாக இருந்தது
-
பல்வேறு அவுட்லெட்டுகளிலும் வலைத்தளங்களிலும் வாடிக்கையாளர்கள் பணம் செலுத்த வேண்டியதாக இருந்தது
-
வாடிக்கையாளர்களுக்கு ஒரு சில பேமெண்ட் முறைகளே இருந்தன
-
நேரடியாக பணம் சேகரிக்கும் அவுட்லெட்டுகள்: ஒரு குறிப்பிட்ட கால அளவுக்கே வேலை செய்தன
-
இயற்பியல் சேகரிப்பு விற்பனை நிலையங்கள் நகர்ப்புறங்களுக்கு வெளியே அரிதாகவே அமைந்திருந்தன
பணம் செலுத்துதலும் அதை சேகரித்தலும் ஒரு நேர விரயமாக இருந்தது, நிறுவன மற்றும் கட்டமைப்புச் செலவுகள் அதிகமாக இருந்தன. ஒரு பேமெண்டில் இருந்து அடுத்ததற்கு தரநிலையாக்கம் இல்லாமல் இருந்தது.
இன்று, பாரத் கனெக்ட் இந்தப் பிரச்சினைகளைத் தீர்க்கிறது
பாரத் கனெக்ட் தளம் என்றால் என்ன ?
பாரத் கனெக்ட் தளம் என்றால் என்ன ?


பாரத் கனெக்ட் RBI யால் கருத்துருவாக்கம் செய்யப்பட்டது.
Iஇது வணிகங்களையும் வாடிக்கையாளர்களையும் ஓர் அமைப்புக்குள் கொண்டு வந்து பணம் வசூலிப்பதுக்கு உதவ தொழில்நுட்ப தீர்வுகளை அளிக்கிறது.
வாடிக்கையாளர்கள் நேரடி பணம் வசூலிக்கும் அவுட்லெட்டுகளிலும் (வங்கிக் கிளைகள், முகவர் வசூல் கடைகள் போன்றவை) டிஜிட்டல் சேனல்கள் (செயலிகள், வலைத்தளங்கள் போன்றவை) மூலமும் இந்தியா எங்கும் பணம் செலுத்தலாம்.
இந்த அமைப்பு வேகமான தீர்வுகளுக்கு உதவுகிறது, பல பணம் செலுத்தும் முறைகளை ஆதரிக்கிறது மற்றும் பலலட்சக் கணக்கான வாடிக்கையாளர்களுக்கு 21,000+ பில்லர்களின் அணுகல் உள்ளது.
பாரத் கனெக்ட் மைய
யூனிட்டின் (BBPCU)
பொறுப்புகள்
எவை ?
பாரத் கனெக்ட் மைய யூனிட் (BBPCU) சிஸ்டத்தை இயக்கும் ஒரே அங்கீகரிக்கபப்ட்ட நிறுவனமாக செயல்படுகிறது.
-
வணிகத்துக்கு செயல்முறைகளையும் நடமுறைகளையும் அமைத்தல்
-
பாரத் கனெக்ட்-யை மார்க்கெட் செய்தல் மற்றும் பிராண்டை நிலைநிறுத்தல்
-
BOU கள், COU களையும் அவற்றின் சம்பந்தப்பட்ட முகமை நிறுவனங்களையும் கணக்குத்தீர்த்து செட்டில்மெண்ட் செய்தல்
-
நுகர்வோர் புகார் மற்றும் தகராறு நிர்வாகம்
-
இயக்கும் யூனிட்டுகள் மற்றும் அவற்றின் தொடர்புடைய பில்லர்கள் மற்றும் முகமை நிறுவனங்களை அறிமுகப்படுத்துதல்
-
பொருத்தமான MIS மற்றும் உகந்த மோசடி அபாய நிர்வாகம்
பாரத் கனெக்ட்
தளத்தின்
நன்மைகள் என்ன ?
-
பில்லர்களுக்கு உகந்த நேரத்தில் வசூல்
ஒரு பேமெண்ட் டெட்லைனும் தப்பிவிட்டது என்று சாக்குப்போக்கு சொலமுடியாத அளவுக்கு மிகவும் எளிமையாக வடிவமைக்கப்பட்ட சிஸ்டம்.
-
வாடிக்கையாளர் சுலபமாக பணம்செலுத்தலாம்
வாடிக்கையாளர்கள் ஒரே தளத்தில், எப்போதும் எங்கிருந்தும் அனைத்து பில்களையும் செலுத்தலாம்
-
நிகழ்நேர உறுதிப்படுத்தல்
SMS அல்லது தாள்வடிவ ரசீதுகள் மூலம் பணம் பரிமாற்றப்பட்டது உடனடியாக பில்லர்களுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் அறிவிக்கப்படும்.
-
மிகப் பாதுகாப்பான புக்கீப்பிங்
ஒவ்வொரு பணம் செலுத்தப்பட்ட பரிமாற்றமும் டிஜிட்டல் முறையில் பாதுகாப்பாகப் பதிவுசெய்யப்படுகிறது.
-
மையப்படுத்தப்பட்ட தகராறு நிர்வாகம்
ஒரே தளத்தில் எந்த ஒரு ஆதரிக்கப்பட்ட பில் தொடர்பான புகாரையும் வாடிக்கையாளர்கள் தாக்கல் செய்ய முடியும்.
-
உண்மையான பொருட்கள்
அனைத்து கூட்டாளர்களும் உண்மையான கட்சிகளுடன் மட்டுமே ஈடுபடுவார்கள்.
அதிக நன்மைகள்

பாரத் கனெக்ட் சிஸ்டத்தின்
வரலாறு என்ன ?
2013 ஆம் ஆண்டு அரசு அக வருவாய் ஆணை (GIRO)
ஆலோசனைக் குழு மூலம் ஒரு தேசிய
அலவிலான
ஆய்வை RBI முன்னெடுத்தபோது
பாரதி பில்பே-யின்
அடித்தளம் போடப்பட்டது.
-
2013
ஒருங்கிணைந்த பில் பேமெண்ட் சிஸ்டத்திற்கான GIRO குழு ஆய்வு
-
2015
பாரத் கனெக்ட் வழிகாட்டல்கள் மற்றும் கட்டமைப்பு உருவாக்கப்பட்டன
-
2016
பாரத் கனெக்ட்-யின் முன்னோடித் திட்டம் அறிமுகம்
-
2017
தேர்ந்தெடுக்கப்பட்ட பேமெண்ட் வகைகளுடன் பாரத் கனெக்ட் செயல்படத் தொடங்கியது
-
2018
பாரத் கனெக்ட் சிஸ்டத்தின் பிராண்ட் அறிமுகம்
-
2019
5 இல் இருந்து 20+ பேமெண்ட் வகைகளாக விரிவு
-
2021
NPCI பாரத் கனெக்ட் லிட் (NBBL) உருவாக்கப்பட்டது.
-
2022
எல்லை தாண்டிய பில் பேமெண்ட் அறிமுகம்
ONDC யில் செட்டில்மெண்ட் ஏஜென்சியாக செயல்பட ஒப்புதல் பெறப்பட்டது
மானிட்டரி கொள்கை ஸ்கோப்பில் பாரத் கனெக்ட் விரிவாக்கம்
-
2023
100+ மில்லியன் பரிமாற்றங்களை எட்டியது

கார்ப்பரேட் சமூகப் பொறுப்பு
நாட்டின் மிகவும் தேவையான சமூகப் பிரச்சினைகளைக் கையாள சில முன்னணி சமூக மேம்பாட்டு அமைப்புகளுடன் ஒருங்கிணைந்து செயலாற்றுதல்.
குழுக்கள்
நீர்வாகக் குழு இயக்குநர்கள்
எங்கள் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் வங்கியியல் மற்றும் ஃபிண்டெக் துறைகளில் பல்லாண்டு அனுபவ்மும் நிபுணத்துவமும் பெற்றவர்கள்.
