

திரு. பராக் ராவ்
இயக்குநர்
திரு பராக் ராவ் ஹெச்டிஎஃப்சி வங்கி லிமிடெட்டில் பணம் செலுத்துதல், நுகர்வோர் நிதி, டிஜிட்டல் வங்கி மற்றும் தொழில்நுட்பம் ஆகியவற்றின் கண்ட்ரி ஹெட்டாக உள்ளார். பணம் செலுத்தும் வணிகத்தில் டெபிட் கார்டுகள், கிரெடிட் கார்டுகள், ப்ரீபெய்ட் & கமர்ஷியல் கார்டுகள், வணிகர் அக்வயரிங் சேவைகள், டிஜிட்டல் பணம் செலுத்தும் உள்கட்டமைப்பு மற்றும் நுகர்வோர் நிதி வணிகம் ஆகியவை அடங்கும். அவர் டிஜிட்டல் வங்கி மற்றும் தொழில்நுட்பத்தை தலைமை ஏற்று வழிநடத்துகிறார்.
திரு ராவ் ஹெச்டிஎஃப்சி வங்கியில் 2002 ஆம் ஆண்டு விற்பனை மற்றும் விநியோகம் - கிரெடிட் கார்டுகள் பிரிவின் தலைவராக சேர்ந்தார். தொழில்நுட்ப போக்குகள், வாடிக்கையாளர் நடத்தை, கடன் முன்கணிப்பு, P&L மேலாண்மை, விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் ஆகியவைகளில் அவருக்கு இருக்கும் பரந்த அறிவு மற்றும் புரிதல் காரணமாக லாபகரமான மற்றும் நிலைத்த பேமெண்ட் வணிகத்தை உருவாக்குவதில் அவர் முக்கிய பங்கு வகித்துள்ளார். அவரது தலைமையின் கீழ், HDFC வங்கி, நாட்டில் பேமெண்ட் வணிகங்களில் (கார்டுகள் மற்றும் கையகப்படுத்துதல்) சந்தையில் முன்னணி நிறுவனமாக வளர்ந்தோடு மட்டுமல்லாமல் பல ஆண்டுகளாக அந்த இடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது.
வணிகப் பொறுப்புகள் மட்டுமல்லாமல் திரு ராவ் எச்டிஎஃப்சி வங்கியின் வாடிக்கையாளர் சேவைக் குழுவில் உறுப்பினராக உள்ளார். 2016 ஆம் ஆண்டு HDB ஃபைனான்சியல் சர்வீசஸ் லிமிடெட் உடன் இணையும் வரை 6 ஆண்டுகள் வங்கியின் விற்பனை துணை நிறுவனமான HBL குழுவில் இயக்குநராக பணியாற்றினார். திரு ராவ் பல நெட்வொர்க் பார்ட்னர்களுக்கு ஆலோசகராகவும் பணியாற்றுகிறார். அவர் டைனர்ஸ் இன்டர்நேஷனலின் குளோபல் அட்வைசரி போர்டு மற்றும் APAC கிளையண்ட் கவுன்சில் ஆஃப் விசாவின் உறுப்பினர்.
இவருக்கு 30 ஆண்டுகளுக்கும் மேலான தொழில் அனுபவம் உள்ளது. எச்டிஎஃப்சி வங்கியில் சேர்வதற்கு முன், திரு ராவ் IBM குளோபல் சர்வீசஸ், கேட்பரிஸ், யூனிலீவர் மற்றும் பெப்சிகோவில் உயர் பதவிகளை வகித்தார். அவர் ஜாம்ஷெட்பூரில் உள்ள பிராந்திய பொறியியல் கல்லூரியில் (REC) பி.டெக் மற்றும் மும்பை எஸ்.பி. ஜெயின் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மென்ட்டில் வணிக நிர்வாகப் படிப்பை முடித்துள்ளார்.