ஃபோரெக்ஸ்

பாதுகாப்பான மற்றும் வசதியான அணுகலுடன் எஃப்எக்ஸ் ரீட்டைல் தளம் மூலம் வெளிப்படையான சந்தை சார்ந்த அந்நியச்செலவாணி வீதங்களை பாரத் கனெக்டில் இருக்கும் ஃபோரெக்ஸ் வகை வழங்குகிறது.

நேரலை பங்குதாரர்கள்

  • ஆக்சிஸ் வங்கி

    ஆக்சிஸ் வங்கி

  • ஃபெடரல் வங்கி

    ஃபெடரல் வங்கி

  • ஐசிஐசிஐ வங்கி

    ஐசிஐசிஐ வங்கி

  • எஸ்பிஐ வங்கி

    எஸ்பிஐ வங்கி

  • யெஸ் வங்கி

    யெஸ் வங்கி

  • மொபிக்விக்

    மொபிக்விக்

  • சிஆர்இடி

    சிஆர்இடி

  • ஆக்சிஸ் வங்கி

    ஆக்சிஸ் வங்கி

  • ஃபெடரல் வங்கி

    ஃபெடரல் வங்கி

  • ஐசிஐசிஐ வங்கி

    ஐசிஐசிஐ வங்கி

  • எஸ்பிஐ வங்கி

    எஸ்பிஐ வங்கி

  • யெஸ் வங்கி

    யெஸ் வங்கி

  • மொபிக்விக்

    மொபிக்விக்

  • சிஆர்இடி

    சிஆர்இடி

அம்சங்கள்

  • மூன்று விருப்பத்தேர்வுகள் - ரொக்கப்பணம், ஃபோரெக்ஸ் அட்டை, இந்தியாவுக்கு வெளியில் பணம் அனுப்புதல்

  • வாடிக்கையாளர் வகைகள் - அறிமுகத்தின்போது இந்தியாவில் வசிக்கும் தனிநபர்களுக்குக் கிடைக்கும்

  • நிகழ்நேர அந்நியச் செலாவணி வீதங்கள்

நன்மைகள்

எளிதான அணுகலால் வணிகம் அதிகரித்தல்

எளிதான அணுகலால் வணிகம் அதிகரித்தல்

வாடிக்கையாளர்கள் விரிவாகவும் ஒழுங்குமுறையுடனும் இணைதல்

வாடிக்கையாளர்கள் விரிவாகவும் ஒழுங்குமுறையுடனும் இணைதல்

பிபிபிஎஸ் மூலம் கிடைக்கும் உத்தரவாதமான தீர்வால் ஆபத்து குறைதல்

பிபிபிஎஸ் மூலம் கிடைக்கும் உத்தரவாதமான தீர்வால் ஆபத்து குறைதல்

பயன்படும் இடங்கள்

அடிக்கடி கேட்கும் கேள்விகள்

எஃப்எக்ஸ் ரீட்டைல் என்பது கிளியர்கார்ப் டீலிங் சிஸ்டம்ஸ் (இந்தியா) லிமிடெட் (கிளியரிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெடுக்கு முற்றிலும் சொந்தமான ஒரு துணை நிறுவனம்) உருவாக்கியுள்ள ஓர் ஆன்லைன் தளமாகும். இது போட்டித்திறன் வாய்ந்ததும் சந்தை சார்ந்ததுமான அந்நியச் செலாவணி வீதங்களை வழங்குகிறது. இது உங்களை அங்கீகரிக்கப்பட்ட டீலர் வங்கிகளுடன் (ஏடி வகை-I) இணைப்பதோடு வெளிப்படைத்தன்மை, விலை அறிதல் மற்றும் ரீட்டைல் அந்நியச் செலாவணி பரிமாற்றங்களுக்கான அணுகலை எளிதாக்குகிறது. இனி நீங்கள் டிஜிட்டல் முறையில் முன்பதிவு செய்யலாம் – அதாவது, பயணம் அல்லது பணம் அனுப்புவதற்காக அமெரிக்க டாலர்களை வாங்கலாம் – அதே நேரத்தில் நீங்கள் கணக்கு வைத்திருக்கும் உங்கள் தொடர்பு வங்கி, தீர்வு மற்றும் நிறைவுசெய்தலைக் கையாளும். தற்போது தேர்ந்தெடுக்கப்பட்ட பிபிபிஎஸ்-ஆல் இயக்கப்படும் TPAP-கள் மற்றும் வங்கியின் செயலி/இணையதளங்களுடன் எஃப்எக்ஸ் ரீட்டைல் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.

உங்கள் தொடர்பில் இருக்கும் வங்கி (ஆர்பி) என்பது உங்கள் சேமிப்பு அல்லது நடப்புக் கணக்கைப் பராமரிக்கும் ஏடி வகை-I வங்கியாகும். இது உங்கள் அந்நியச் செலாவணி பரிமாற்றங்களைத் கையாண்டு அந்நியச் செலாவணியை (எ.கா., பணம் அனுப்புதல், அட்டை அல்லது ரொக்கம்) வழங்கும்.

பிபிபிஎஸ்-ஆல் இயக்கப்படும் சேனல்கள் மூலம் தற்போது கீழ்க்காணும் வங்கிகள் கிடைக்கின்றன:
● ஆக்சிஸ் வங்கி
● ஃபெடரால் வங்கி
● ஐசிஐசிஐ வங்கி
● ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா
● யெஸ் வங்கி

டிஆர்ஏபிகள் (தேர்டு பார்ட்டி அப்ளிகேஷன் புரவைடர்) என்பவை யூபிஐ-யால் இயக்கப்படும் செயலிகள். இவற்றைப் பயன்படுத்தி பாரத் கனெக்டில் ஃபோரெக்ஸ் வகையை அணுகலாம்.

கிளியர்கார்ப் (கிளியர்கார்ப் டீலிங் சிஸ்டம்ஸ் (இந்தியா) லிமிடெட்) என்பது இந்தியாவின் பல்வேறு நிதிச் சந்தைகளில் கிளியரிங் மற்றும் செட்டில்மென்ட் சேவைகளை வழங்கும் ஒரு மைய உள்கட்டமைப்பு நிறுவனமாகும். இது பின்வருவனவற்றில் முதன்மைப் பங்கை ஆற்றுகிறது:
• ஒரு தனித்துவமான வாடிக்கையாளர் ஐடி-யை உருவாக்குதல் மற்றும் ஏற்கெனவே இருக்கும் வாடிக்கையாளர் ஐடி-யைச் சரிபார்த்தல்
• ஏற்கெனவே இருக்கும் செயல்முறையின்படி வெளிச்சந்தையில் இருந்து விலைகளைப் பெறுதல்
• பெற்ற விலையில் வங்கிகளால் வழங்கப்படும் கட்டணங்களைச் சேர்த்தல்.
• ஆர்டர் ஒப்பந்தங்கள் மற்றும் நிலையைத் தெரிவித்தல்.

NPCI-க்கு முற்றிலும் சொந்தமான பாரத் பில் பே லிமிடெட் (என்பிபிஎல்) ஆல் இயக்கப்படும் பாரத் கனெக்ட் இந்தியா முழுவதும் உள்ள நேரடியாக செலுத்தும் பணத்தை வசூல் செய்யும் மையங்கள் (வங்கிக் கிளைகள், சேகரிப்பு முகவர் கடைகள் போன்றவை) மற்றும் டிஜிட்டல் சேனல்கள் (செயலிகள், வலைத்தளங்கள் போன்றவை) மூலம் வாடிக்கையாளர்கள் பணம்செலுத்த உதவுகிறது. பாரத் கனெக்ட் செயல்படுத்தப்பட்ட சேனல்கள் (டிஆர்ஏபி மற்றும் வங்கி செயலிகள் போன்றவை) மூலம் எஃப்எக்ஸ்-ரீட்டைல் தளத்தில் வாடிக்கையாளர்களை இணைத்து பரிமாற்றங்களைச் செயல்படுத்த எஃப்எக்ஸ்-ரீட்டைல் சேவை பாரத் கனெக்டுடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது).

நிலை 1 இல் இந்தியாவில் வசிக்கும் தனிநபர் மட்டுமே பதிவுசெய்து பரிமாற்றம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள் 1.

இப்போது உங்களால் யுஎஸ் டாலர்களை மட்டுமே வாங்க முடியும்.

உங்களுக்குக் கிடைக்கும் வரம்பு:
● ஃபோரெக்ஸ் அட்டைக்கு யுஎஸ்டி 10,000
● பணம் அனுப்ப யுஎஸ்D 10,000
● காகிதக் கரன்சி யுஎஸ்டி 3,000
தேர்ந்தெடுக்கப்படும் பணம்அனுப்பும் முறைக்கு ஏற்ப பொருந்தும் வரம்புகள் அமையும் என்பதைக் கவனிக்கவும்..

தாராளமயமாக்கப்பட்ட பணம் அனுப்பும் திட்டத்தின் (எல்ஆர்எஸ்) கீழ் ஒட்டுமொத்த வரம்பிற்குள் இருக்கும்வரை உங்களால் தினமும் வரம்பற்ற பரிமாற்றங்களைச் செய்யலாம்).

எல்ஆர்எஸ் என்பது இந்திய ரிசர்வ் வங்கி ஆர்பிஐ) வழங்கும் ஒரு வசதியாகும். இது கல்வி, பயணம், மருத்துவச் சிகிச்சை போன்ற அனுமதிக்கப்பட்ட நடப்பு அல்லது மூலதனக் கணக்கு பரிமாற்றங்களுக்கு ஒரு நிதியாண்டுக்கு 250,000 அமெரிக்க டாலர்கள் வரை வெளிநாடுகளுக்கு அனுப்ப உங்களை அனுமதிக்கிறது. எல்ஆர்எஸ் இன் கீழ் அனைத்துப் பணம் அனுப்பும் முறைகளும் எஃப்இஎம்ஏ விதிமுறைகளுக்கு இணங்க வேண்டும்.

பதிவுசெய்து எஃப்எக்ஸ் ரீட்டைல் சேவைகளை அணுக பின்வரும் தளங்களை நீங்கள் பயன்படுத்தலாம்:
● ஃபெடரல் பேங்க் மொபைல் பேங்கிங் ஆப்
● சிஆர்இடி
● மொபிக்விக்
● எஸ்பிஐ இன்டெர்னெட் பேங்கிங் போர்ட்டல்

இல்லை, பாரத் கனெக்ட் சேனல்கள் மூலம் பதிவு செய்யும்போது பதிவுக் கட்டணம் எதுவும் இல்லை.

பதிவு முழுமையாக டிஜிட்டல் முறையில் செய்யப்படுவதால், எந்த ஆவணங்களும் தேவையில்லை. உங்கள் பான் டிஆர்ஏபி அல்லது வங்கித் தளத்தால் சரிபார்க்கப்படும். முன்நிபந்தனைகள் பின்வருமாறு:
• தேர்ந்தெடுக்கப்பட்ட தொடர்பு வங்கிக் கணக்கு செயலில் இருக்க வேண்டும் மற்றும் கேஒய்சி இணக்கமாக இருக்க வேண்டும்
• இந்தியாவில் வெளிநாட்டு நாணயத்தை வாங்குவதற்கு நீங்கள் தகுதி பெற்றிருக்க வேண்டும்
• தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கிக் கணக்கின் முதன்மை கணக்குதாரராக நீங்கள் இருக்க வேண்டும்

பதிவு செய்ய, நீங்கள்:
• விருப்பமான செயலி அல்லது வலைத்தளத்தில் “ஃபோரெக்ஸ்” ஐகானைத் தேர்ந்தெடுக்கவும்
• உங்கள் வாடிக்கையாளர் வகையைத் தேர்ந்தெடுத்து உங்கள் தொடர்பு வங்கியைத் தேர்ந்தெடுத்து தேவையான விவரங்களை உள்ளிடவும் (வங்கி கணக்கு, பான், IFSC போன்றவை)
• உங்கள் பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் ஐடியைப் பயன்படுத்தி ஓடிபி-யைச் சரிபார்க்கவும்.
• சரிபார்க்கப்பட்டதும் உங்கள் எஃப்எக்ஸ் ரீட்டைல் வாடிக்கையாளர் ஐடி காட்டப்பட்டு உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பப்படும்.

பதிவின் போது, நீங்கள் சேமிப்புக் கணக்கை வைத்திருக்கும் வங்கிகளில் இருந்து தேர்வு செய்யலாம். நீங்கள் ஒரு வங்கியின் சொந்தச் செயலி அல்லது இணைய வங்கித் தளம் வழியாகப் பதிவு செய்தால் அந்த வங்கி உங்கள் தொடர்பு வங்கியாகத் தேர்ந்தெடுக்கப்படலாம்.

தொடக்க நிலையில் இல்லை. பிபிபிஎஸ்- ஆல் இயக்கப்படும் செயலி அல்லது வலைத்தளம் வழியாக நீங்கள் ஒரு தொடர்பு வங்கியில் மட்டுமே பதிவு செய்ய முடியும். மேலும் கூடுதல் வங்கிகளைச் சேர்க்க ஆரம்ப சேர்க்கைக்குப் பின் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பப்பட்ட சான்றுகளைப் பயன்படுத்தி எஃப்எக்ஸ் ரீட்டைல் வலைத்தளத்தில் (https://www. fx retail.co.in/#/login/) உள்நுழையவும். பின்னர் பிற வங்கிகளைச் சேர்க்க “வங்கித் தொடர்பு” என்பதற்குச் செல்லவும்..

தேவையில்லை. உங்களிடம் ஏற்கனவே எஃப்எக்ஸ் ரீட்டைல் ஐடி இருந்தால், நீங்கள் நேரடியாகப் பரிமாற்றங்களைத் தொடரலாம். ஆதரிக்கப்படும் எந்த ஒரு செயலி அல்லது வலைத்தளத்திலும் எனது எஃப்எக்ஸ்

ஆம். உங்கள் எஃப்எக்ஸ் ரீட்டைல் வாடிக்கையாளர் ஐடி அனைத்து ஒருங்கிணைந்த தளங்களிலும் வேலை செய்கிறது.

a) நீங்கள் டிஆர்ஏபி வழியாகப் பதிவுசெய்தால் உங்கள் விவரங்கள் டிஜிட்டல் முறையில் சரிபார்க்கப்படும் என்பதால் எந்தக் காகித ஆவணங்களும் தேவையில்லை.
b) நீங்கள் ஒரு வங்கியின் சேனல் வழியாகப் பதிவுசெய்தால் வங்கி உங்கள் தற்போதைய தரவைப் பயன்படுத்தும். உங்கள் கணக்கு முன்நிபந்தனைகளைப் பூர்த்தி செய்கிறது என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

இல்லை. நிலை 1 இல் இல்லை. வசிக்கும் தனிநபர்கள் மட்டுமே பதிவு செய்ய முடியும்.

இல்லை. இந்த விவரங்களின் அடிப்படையில் ஒரு தனிப்பட்ட ஐடி மட்டுமே உருவாக்கப்படுவதை கிளியர்கார்ப் உறுதி செய்கிறது.

பிபிபிஎஸ்-யால் இயக்கப்படும் ஃபிரண்ட்-எண்ட்சேனல்களைப் பயன்படுத்தி நீங்கள் 24x7 பதிவு செய்யலாம்.

எஃப்எக்ஸ் ரீட்டைலிடம் இருந்து இரண்டு ஓடிபிகளைப் பெறுவீர்கள் - ஒன்று உங்கள் பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணிலும் மற்றொன்று உங்கள் மின்னஞ்சல் முகவரியிலும் வரும்.

இல்லை. உங்கள் டிஆர்ஏபி அல்லது வங்கி பதிவுகளின் அடிப்படையில் உங்கள் மொபைல் எண் முன்கூட்டியே நிரப்பப்படும். அதைத் திருத்த முடியாது.

உங்கள் சான்றுகளை செயலிழக்கச் செய்ய அல்லது புதுப்பிக்க நீங்கள் எஃப்எக்ஸ் ரீட்டைல் வலைத்தளத்துக்கு (www. fxretail.co.in) வருகை புரிய வேண்டும். அனைத்து மாற்றங்களும் எஃப்எக்ஸ் ரீட்டைல் மூலம் நேரடியாகச் செய்யப்பட வேண்டும்.

முடியும். ஆனால் எஃப்எக்ஸ் ரீட்டைல் வலைத்தளத்தின் (www. fxretail.co.in) வழியாக மட்டுமே செய்ய முடியும். பதிவு செய்வதற்கு மொபைல் எண்ணும் மின்னஞ்சலும் கட்டாயமாகத் தேவை என்பதால் நீங்கள் உங்கள் மொபைல் எண்ணை மாற்றினால் ரத்துசெய்து மீண்டும் பதிவு செய்ய வேண்டும். மின்னஞ்சலை மாற்ற எஃப்எக்ஸ் ரீட்டைல் தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள செயல்முறையைப் பின்பற்றவும்.

தற்போது நீங்கள் இந்திய ரூபாயை (ஐஎன்ஆர்) பயன்படுத்தி அமெரிக்க டாலர்களை மட்டுமே வாங்க முடியும்.

பின்வரும் நோக்கங்களுக்காக நீங்கள் அந்நிய செலாவணியை வாங்கலாம்:
a) வெளிநாட்டுப் பயணம்
b) அந்நியச் செலாவணி அட்டையை மீண்டும் லோட் செய்தல் (உங்கள் தொடர்பு வங்கியால் வழங்கப்பட்டது)
c) எஃப்இஎம்ஏ/ஒழுங்குமுறை வழிகாட்டுதல்களின்படி வரையறுக்கப்பட்ட நோக்கங்களுக்காக இந்தியாவுக்கு வெளியில் பணம் அனுப்புதல்

வேலை நாட்களில் (திங்கள் முதல் வெள்ளி வரை) காலை 9:15 மணி முதல் பிற்பகல் 3:30 மணி வரை பரிமாற்றங்களை முன்பதிவு செய்யலாம்.

பதிவுசெய்த பின் நீங்கள் செய்ய வேண்டியது:
• பிபிபிஎஸ்-ஆல் இயக்கப்படும் சேனலில் “ஃபோரெக்ஸ்” வகையைத் திறக்கவும்
• ஃபோரெக்ஸ் (ரொக்கம், ஃபோரெக்ஸ் அட்டை அல்லது இந்தியாவுக்கு வெளியில் பணம் அனுப்புதல்) தயாரிப்பு வகையைத் தேர்வுசெய்து உங்கள் தொடர்பு வங்கியைத் தேர்வு செய்யவும்
• நீங்கள் வாங்க விரும்பும் யுஎஸ்டி தொகையை உள்ளிடவும்
• மாற்று வீதம், வங்கி கட்டணங்கள் மற்றும் செலுத்த வேண்டிய மொத்த ஐஎன்ஆர் ஆகியவற்றை மீள்பார்வை செய்யவும்
• உங்கள் கணக்கில் இருந்து குறிப்பிட்ட ஐஎன்ஆர் தொகையை டெபிட் செய்ய ஒரு ஆணையை வழங்கவும்
• வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டதும் நீங்கள் உறுதிப்படுத்தலைத் திரையிலும் SMS மற்றும் மின்னஞ்சலிலும் பெறுவீர்கள்.
குறிப்பு: பயன்படுத்தப்படும் செயலி/வலைத்தளத்தைப் பொறுத்து சரியான உள்ளீடுகள் சற்று மாறுபடலாம்

ஆம், முன்பதிவு செய்வதற்கு முன் ஒரு குறிப்பான வீதத்தை (கடைசியாக வர்த்தகம் செய்யப்பட்ட எஃப்எக்ஸ் ரீட்டைல் விலை) நீங்கள் காண்பீர்கள். கிடைக்கக்கூடிய சிறந்த வீதத்தில் விகித ஏற்ற இறக்கத்தில் இருந்து பாதுகாப்பிற்காக ஒரு சிறிய இடையகம் (பஃபர்) உள்ளமைக்கப்பட்டிருக்கும். பொருந்தக்கூடியபடி வங்கிக் கட்டணங்கள் தனித்தனியாகக் காட்டப்படும்.

இது உங்கள் தொடர்பு வங்கியால் அடிப்படை ஃபோரெக்ஸ் வீதத்தில் சேர்க்கப்படும் கட்டணமாகும். வசூலிக்கப்படும் தொகை வங்கிக்கு வங்கி மாறுபடலாம்.

எஃப்எக்ஸ் ரீட்டைல் அந்நிய செலாவணி விகிதத்தை வழங்குகிறது, அதே நேரத்தில் உங்கள் தொடர்பு வங்கி கட்டணங்களை வழங்குகிறது. அவை உங்கள் பரிமாற்றத்தின் போது காட்டப்படும்.

எஃப்எக்ஸ் ரீட்டைலால் வழங்கப்படும் அந்நிய செலாவணி வீதம் ஏற்ற இறக்கமாக இருக்கலாம். நிலையற்ற தன்மை காரணமாக நிராகரிப்புகளைத் தவிர்க்க எஃப்எக்ஸ் ரீட்டைலால் ஒரு சிறிய இடையகம் (பஃபர்) சேர்க்கப்படுகிறது.

வீத ஏற்ற இறக்கங்களை ஈடுகட்ட ஓர் இடையகம் என்பது ஒரு சிறிய கூடுதல் தொகையாகும். இது ஒரு கட்டணம் அல்ல. காட்டப்படும் அந்நியச் செலாவணி வீதம் இடையகத்தை உள்ளடக்கியது. பற்று வைக்கப்பட்ட தொகைக்கும் இறுதி முன்பதிவு தொகைக்கும் இடையிலான எந்த வித்தியாசமும் திரும்பப் பெறப்படும்.

தொகை டெபிட் செய்யப்பட்டாலும் செயலி/இணையதளம் "நிலுவையில் உள்ளது" என்ற நிலையைக் காட்டினால் இறுதிப் பரிமாற்ற நிலை உறுதிப்படுத்தப்படுவதற்காகக் காத்திருக்கவும். எஃப்எக்ஸ் ரீட்டைலிடம் இருந்து உறுதிப்படுத்தப்பட்டவுடன் இறுதி நிலை (வெற்றி அல்லது தோல்வி) காட்டப்படும். தோல்வி ஏற்பட்டால் டெபிட் செய்யப்பட்ட தொகையைச் செயலி திருப்பி அளிக்கும்.

செயலியிலோ அல்லது இணையதளத்திலோ உறுதிப்படுத்தல் செய்தியைக் காண்பீர்கள். பரிமாற்ற விவரங்களுடன் கூடிய SMS –ஐயும் மின்னஞ்சலையும் பெறுவீர்கள்.

நீங்கள் வாங்கியவை பற்றிய விவரங்கள் செயலி/வலைத்தளத்தில் காட்டப்படும். SMS மற்றும் மின்னஞ்சல் மூலமாகவும் உறுதிப்படுத்தலைப் பெறுவீர்கள்.

ஆம், அனுப்ப முடியும்.

அந்நியச் செலாவணி டெலிவரிக்கு மூன்று விருப்பத்தேர்வுகள் உள்ளன:
(1) பணம் அனுப்புதல்
(2) அந்நியச் செலாவணி அட்டை ரீலோட் மற்றும்
(3) காகித நாணயம். பரிமாற்றத்தை முன்பதிவு செய்யும் போது செயலி அல்லது வலைத்தளத்தில் இந்த டெலிவரி முறைகளில் ஒன்றை நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்ட டெலிவரி விருப்பம், வாங்கிய அந்நியச் செலாவணி தொடர்பு வங்கியால் எவ்வாறு நிறைவேற்றப்படும் என்பதை தீர்மானிக்கிறது.

ஆம், நிறைவேற்றம் செய்வதற்காக உங்கள் வங்கி வழங்கிய URL மூலம் நிதியை டிஜிட்டல் முறையில் அனுப்பலாம். வங்கிக்குத் தேவையான பயனாளி விவரங்கள் மற்றும் பிற விவரங்களை நீங்கள் வழங்க வேண்டும்.

உங்கள் தொடர்பு வங்கி ஃபோரெக்ஸ் அட்டை அல்லது கரன்சியை வழங்கும். ரொக்கம் (காகிதக் கரன்சி) கிளையில் சேகரிக்கப்பட வேண்டும். அதே நேரத்தில் ஃபோரெக்ஸ் அட்டையை டிஜிட்டல் முறையில் அல்லது கிளையில் ரீலோட் செய்யலாம். இது தேர்ந்தெடுக்கப்பட்ட நிறைவேற்ற முறையைப் பொறுத்தது.

பரிமாற்றம் டெபிட் செய்யப்படும் வேளையில் இறுதி அந்நியச் செலாவணி வீதத்தில் சேர்க்கப்பட்டுள்ள வங்கி கட்டணங்களைத் தவிர, கொள்முதலை நிறைவேற்றுவதற்கு உங்கள் வங்கி கூடுதல் கட்டணங்களை விதிக்கலாம். அத்தகைய கட்டணங்களில் பணம் அனுப்புவதற்கான கட்டணங்கள் / ரீலோட் கட்டணங்கள் / ஜிஎஸ்டி மற்றும் நிறைவேற்றத்தைச் செயலாக்குவதற்கான பிற நிலையான கட்டணங்கள் ஆகியவை அடங்கும். கூடுதல் கட்டணங்கள் மற்றும் வரிகள் வங்கியால் நேரடியாக வசூலிக்கப்படும் என்ற பொறுப்புதுறப்பு பணம் அனுப்புவதற்கு முன் திரையில் காட்டப்படும்.

ஆம், கணக்கு உங்களுடையதாக இருந்தால் முடியும். பணம் அனுப்புதல் உங்கள் சொந்தக் கணக்கில் இருந்து வர வேண்டும்; மூன்றாம் தரப்பு கணக்கில் இருந்து அல்ல. பரிமாற்றங்கள் எல்ஆர்எஸ் வழிகாட்டுதல்களின் கீழ் உங்கள் பான் உடன் இணைக்கப்பட்டுள்ளன.

முடியாது. பரிமாற்றம் உறுதிசெய்யப்பட்ட பின் அதை நீங்கள் ரத்து செய்ய முடியாது.

ஆம், உங்கள் தொடர்பு வங்கி விதிமுறைக்கு இணங்காமல் இருப்பது, வராமல் இருப்பது அல்லது AML மீறல்கள் காரணமாக அதை ரத்து செய்யலாம்.
பரிமாற்றத்தை உங்கள் வங்கி ரத்து செய்தால் அது பொருந்தக்கூடிய கட்டணங்கள் மற்றும் அந்நிய செலாவணி இழப்புகளை (ஏதும் இருந்தால்) மீட்டு உங்கள் கணக்கில் நிலுவைத் தொகையை (ஐஎன்ஆர் இல்) திருப்பி வரவுவைக்கும்.

AML, அல்லது பணமோசடிக்கு எதிரான நடவடிக்கை, பணமோசடி, பயங்கரவாதத்துக்கு ஆதரவாக நிதியுதவி அல்லது மோசடி பரிமாற்றங்கள் போன்ற சட்டவிரோத நிதி நடவடிக்கைகளைத் தடுக்க வடிவமைக்கப்பட்ட ஒழுங்குமுறை நடைமுறைகளைக் குறிக்கிறது. எஃப்எக்ஸ் ரீட்டைல் மூலம் நடத்தப்படும் அனைத்து அந்நியச் செலாவணி பரிமாற்றங்களும் உங்கள் தொடர்பு வங்கியால் ஏஎம்எல் சோதனைகளுக்கு உட்படுத்தப்படும். ஒரு பரிமாற்றம் சந்தேகத்திற்குரியதாகத் தோன்றினால், பொருத்தமான ஆவணங்கள் இல்லாதிருந்தால், அல்லது ஆர்பிஐ அல்லது எஃப்இஎம்ஏ விதிமுறைகளை மீறினால், முன் அறிவிப்புடன் அல்லது இல்லாமல் அதை ரத்து செய்ய வங்கிக்கு உரிமை உண்டு. நிதியின் ஆதாரம் அல்லது பணம் அனுப்பியதன் நோக்கம் தொடர்பான கூடுதல் ஆவணங்களையும் நீங்கள் சமர்ப்பிக்க வேண்டியிருக்கலாம்.

எஃப்இஎம்ஏ (ஃபாரின் எக்சேஞ்ச் மேனேஜ்மெண்ட் ஆக்ட்) என்பது அந்நியச் செலாவணி பரிமாற்றங்கள் மற்றும் வெளிநாட்டு வர்த்தகத்தை ஒழுங்குபடுத்துவதற்காக 1999 இல் இயற்றப்பட்ட ஓர் இந்தியச் சட்டமாகும். இது வெளிநாட்டு பணம்செலுத்துதல்களைச்எளிதாக்குதல், அந்நிய செலாவணி சந்தையின் ஒழுங்கான வளர்ச்சியை ஊக்குவித்தல் மற்றும் இந்தியாவின் அந்நியச்செலாவணி கொள்கைகளுடன் இணங்குவதை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. சட்ட மற்றும் ஒழுங்குமுறை இணக்கத்தை உறுதி செய்வதற்காக அனைத்து அந்நிய செலாவணிப் பரிமாற்றங்களும் எஃப்இஎம்ஏ வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும்.

அமெரிக்க டாலர்களை வாங்குவதற்கான ஆர்டர் பிபிபிஎஸ்-ஆல் இயக்கப்படும் சேனல்கள் மூலம் செய்யப்படும் அதே வேளையில் பரிமாற்ற நிறைவேற்றம் தொடர்பு வங்கி (RB) மூலம் முடிக்கப்பட வேண்டும். ஆர்டரை முடிப்பதற்காக தொடர்பு வங்கி உங்களிடம் இருந்து தொடர்புடைய ஆவணங்களைக் கோரலாம். எடுத்துக்காட்டாக ஆர்டரில் அமெரிக்க டாலர்களை ரொக்கமாக வாங்குவது அல்லது வெளிநாட்டு பயணத்திற்கான ஏற்கெனவே இருக்கும் அந்நியச் செலாவணி அட்டையை மீண்டும் லோடு செய்வது ஆகியவை இருந்தால் தொடர்பு வங்கி பயண டிக்கெட் நகல், பாஸ்போர்ட் போன்ற ஆவணங்களைக் கேட்கலாம். தாராளமயமாக்கப்பட்ட பணம் அனுப்பும் திட்டத்தின் (எல்ஆர்எஸ்) கீழ் இந்தியாவுக்கு வெளியில் பணம் அனுப்புவதைப் பொறுத்தவரையில் தேவைப்படும் ஆவணங்கள் பணம் அனுப்பும் குறிப்பிட்ட நோக்கத்தைப் பொறுத்து மாறுபடும். தடையற்ற செயலாக்கத்தை உறுதி செய்வதற்காக வங்கி உங்களுக்கு அதற்கேற்ப வழிகாட்டும். நீங்கள் தேர்ந்தெடுத்த நிறைவேற்றம் செய்யும் முறையின்படி இந்த ஆவணங்களை ஆன்லைனில் அல்லது கிளையில் சமர்ப்பிக்க வேண்டும்.

உங்கள் தொடர்பு வங்கியில் இருந்து பெறப்பட்ட மின்னஞ்சல் அல்லது தகவல்தொடர்பை நீங்கள் பார்க்க வேண்டும். அந்தப் பட்டியல் எந்த ஆவணங்கள் தேவை என்பதைக் குறிப்பிடும். முன்பதிவு செய்யும் போது நீங்கள் தேர்ந்தெடுத்த நிறைவேற்றும் முறையைப் பொறுத்து, அவற்றை ஆன்லைனிலோ அல்லது நேரிலோ சமர்ப்பிக்கலாம்.

ஆம், முன்பதிவு செய்த பின் எஸ்எம்எஸ் மற்றும் மின்னஞ்சல் மூலம் பாரத் கனெக்ட் பரிமாற்ற ஐடி & எஃப்எக்ஸ் ரீட்டைல் வர்த்தக எண்ணைப் பெறுவீர்கள். உங்கள் வங்கியுடனான எந்த ஒரு தொடர்புக்கும் நீங்கள் இவற்றைப் பயன்படுத்த வேண்டும்..

குறிப்பிட்ட வங்கியால் அந்நிய செலாவணி (காகித நாணயம்) பராமரிக்கப்படும் கிளைகள் முன்பதிவு செய்யும் போது காட்டப்படும். இது கிளையைத் தேர்வு செய்வற்கு உதவும்.

நிறைவேற்றும் முறைகளுக்கு வங்கிக் கிளை அல்லது வங்கியின் ஆன்லைன் போர்ட்டலை நீங்கள் தேர்வு செய்யலாம். ஃபோரெக்ஸ் கார்டு ரீலோட் மற்றும் இந்தியாவுக்கு வெளியில் பணம் அனுப்புவது கிளையிலோ அல்லது ஆன்லைன் மூலமோ நிறைவேற்றப்படலாம். இருந்தாலும், ரொக்கமாக வழங்குதல் (பணமாக) வங்கி கிளையில் மட்டுமே நிறைவேற்றப்படலாம்.
குறிப்பு: ஒவ்வொரு நிறைவேற்றும் முறையிலும் ஒவ்வொரு தயாரிப்பின் கிடைக்கும் தன்மை உங்கள் வங்கியைப் பொறுத்தது

ஆம், நிறைவேற்றும் நேரத்தில் உங்கள் வங்கி கூடுதல் கட்டணங்கள் மற்றும் வரிகளை (TCS, GST, முதலியன) விதிக்கலாம். உங்கள் பரிமாற்றத்தை உறுதிப்படுத்துவதற்கு முன் ஒரு பொறுப்புதுறப்பு காட்டப்படும்.

அது டெலிவரி முறையைப் பொறுத்தது:
• ரொக்கம் (நாணயம்): பணத்தைப் பெற, தேவையான ஆவணங்கள் (வங்கியில் இருந்து பெறப்பட்ட மின்னஞ்சல் தகவல்தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ளபடி) மற்றும் முன்பதிவு விவரங்களுடன் தேர்ந்தெடுக்கப்பட்ட கிளைக்குச் செல்ல வேண்டும்.
• ஃபோரெக்ஸ் அட்டை: நீங்கள் கிளை அடிப்படையிலான நிறைவேற்றும் சேவையைத் தேர்ந்தெடுத்திருந்தால் கோரப்பட்ட ஆவணங்களுடன் உங்கள் அட்டையை மீண்டும் லோடு செய்வதற்கு வங்கிக்குக் கொண்டு வரவேண்டும். வங்கியின் ஆன்லைன் போர்ட்டலில் நிறைவேற்ற சேவையைத் தேர்ந்தெடுத்திருந்தால் திரையில் காட்டப்படும்/அஞ்சலில் பெறப்பட்ட இணைப்பைத் திறப்பதன் மூலம் நீங்கள் தொடரலாம்.
• பணம் அனுப்புதல்: நீங்கள் கிளை அடிப்படையிலான நிறைவேற்றச் சேவையைத் தேர்ந்தெடுத்திருந்தால் கோரப்பட்ட ஆவணங்களுடன் உங்கள் அட்டையை மீண்டும் லோடு செய்வதற்கு வங்கிக்குக் கொண்டு வரவேண்டும். வங்கியின் ஆன்லைன் போர்ட்டலில் பூர்த்திச் சேவையைத் தேர்ந்தெடுத்திருந்தால், திரையில் காட்டப்படும்/அஞ்சலில் பெறப்பட்ட இணைப்பைத் திறப்பதன் மூலம் நீங்கள் தொடரலாம்.

ஆம், உங்கள் தொடர்பு வங்கி ஆன்லைன் பரிமாற்றத்தை ஆதரித்தால் நீங்கள் அதை டிஜிட்டல் முறையில் நிறைவேற்றம் செய்யலாம்.

நீங்கள்:
• உங்கள் வங்கியின் உறுதிப்படுத்தல் மின்னஞ்சலில் குறிப்பிடப்பட்டுள்ளபடி தேவையான அனைத்து ஆவணங்களையும் தயாராக வைத்திருக்க வேண்டும்
• உங்கள் வங்கியின் டிஜிட்டல் தளத்திற்கான உள்நுழைவு சான்றுகளை வைத்திருக்க வேண்டும்
• பரிமாற்றக் குறிப்பு எண்களை (பாரத் கனெக்ட் பரிவர்த்தனை ஐடி மற்றும்/அல்லது எஃப்எக்ஸ் ரீட்டைல் எண்) துல்லியமாக உள்ளிடவும்
• நோக்கக் குறியீடுகளை உள்ளிடவும் அல்லது தேவைக்கேற்ப ஆவணங்களைப் பதிவேற்றவும்
• டிஜிட்டல் பயணம் தடைபட்டால், நீங்கள் மீண்டும் உள்நுழைந்து, அது நிறுத்தப்பட்ட இடத்தில் இருந்து செயல்முறையை மீண்டும் தொடங்க வேண்டும்.
• ஆன்லைனில் அல்லது கிளையில் தகவலறிந்த கட்டணங்களைச் செலுத்தவும்

இந்தியாவுக்கு வெளியில் பணம் அனுப்புவதற்கான டிஜிட்டல் நிறைவேற்றத்திற்கு (வங்கியின் போர்டல் மூலம்) அனுமதிக்கப்பட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட நோக்கக் குறியீடுகள் மட்டுமே அனுமதிக்கபப்டும். பரிவர்த்தனையைத் தொடர்வதற்கு முன் உங்கள் வங்கியைத் தொடர்பு கொள்ளவும்.
ஆன்லைன் மூலம் பணம் அனுப்ப அனுமதிக்கப்படாத நோக்கக் குறியீடுகளைப் பொறுத்தவரையில் நீங்கள் அதை நிறைவேற்ற வங்கி கிளைக்குச் செல்ல வேண்டியிருக்கலாம்.
குறிப்பு: இந்தியாவுக்கு வெளியில் பணம் அனுப்புவதைப் பொறுத்தவரையில் பயனாளியின் விவரங்களையும் வங்கி கேட்கும். நீங்கள் அனைத்து விவரங்களையும் கவனமாக நிரப்ப வேண்டும். விவரங்கள் தவறாக நிரப்பப்பட்டு கணக்கு எண் / பிற விவரங்கள் பொருந்தவில்லை என்றால் பரிமாற்றம் தோல்வியடையக்கூடும். இதுபோன்ற சூழ்நிலையில் வங்கி கிரெடிட்டைத் திரும்பப் பெறும்போதெல்லாம் உங்கள் கணக்கில் பணத்தை மீண்டும் வரவுவைக்கும் மற்றும் பரிமாற்றம் ரத்து செய்வதற்கான விதிமுறைகள் பொருந்தும் (கட்டணங்கள் மற்றும் இழப்புகள் ஏதும் இருந்தால் மீட்டெடுக்கப்படும் மற்றும் மீதமுள்ள தொகை உங்கள் கணக்கில் வரவு வைக்கப்படும்).

ஆம், உங்கள் வங்கி பின்வரும் சந்தர்ப்பங்களில் ஒப்பந்தத்தை ரத்து செய்யலாம்:
• எல்ஆர்எஸ் வரம்பு மீறல்
• ஒழுங்குமுறை இணக்கமின்மை
• தேவையான ஆவணங்களைச் சரியான நேரத்தில் சமர்ப்பிக்காதது
• செல்லாத அல்லது போலியான ஆவணங்கள்
• கேட்கப்படும் போது கூடுதல் ஆவணங்களைச் சமர்ப்பிக்கத் தவறியது
• கட்டணங்கள் அல்லது வரிகளுக்கு போதுமான நிதியிருப்பு இல்லாமல் இருப்பது
• கேட்கப்படும் போது நிதி ஆதாரத்தை வழங்கத் தவறியது
• தேர்ந்தெடுக்கப்பட்ட கிளைக்குச் செல்லாதது (கிளை உதவி பெறும் நேர்வுகளுக்கு)

நீங்கள் அதை சேகரிக்கத் தவறினால் அடுத்த கட்ட நடைமுறைகளுக்கு உங்கள் தொடர்பு வங்கியைத் தொடர்பு கொள்ள வேண்டும்.

ஆம். அனைத்து தனிப்பட்ட மற்றும் நிதித் தரவுகளும் பாதுகாப்பான APIகள் மூலம் சரிபார்க்கப்படுகின்றன.

நீங்கள் தொடர்பு கொள்ள வேண்டியது:
• நீங்கள் பயன்படுத்திய செயலி அல்லது தளம்
• உங்கள் தொடர்பு வங்கி
• https://www. fxretail.co.in/#/login/ இல் எஃப்எக்ஸ் ரீட்டைல் ஆதரவு

• முன்பதிவு தொடர்பான அல்லது ஆர்டர் தொடர்பான சிக்கல்களுக்குத் உங்கள் வங்கியை நேரடியாகத் தொடர்பு கொள்ளவும்.
• செயலி/வலைத்தள சிக்கல்களுக்குத் தளத்தில் நேரடியாகப் புகாரளிக்கவும்.
• எஃப்எக்ஸ் ரீட்டைல் தொடர்பான சிக்கல்களுக்கு support fxretail@ccilindia.co.in என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும் அல்லது எஃப்எக்ஸ் ரீட்டைல் போர்ட்டலில் குறை தீர்க்கும் புகாரைச் சமர்ப்பிக்கவும்.

ஆம், நீங்கள் எஃப்எக்ஸ்-ரீட்டைல் ஆதரவு குழுவை support fxretail@ccilindia.co.in என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம் அல்லது 1800 266 2109 (கட்டணமில்லாத எண்) அல்லது +91 22 6154 6313 என்ற உதவி எண்களை அழைக்கலாம். உதவி மையத்தைத் திங்கள் முதல் வெள்ளி வரை காலை 8:00 மணி முதல் மாலை 7:30 மணி வரை தொடர்புகொள்ளலாம். அந்தந்தச் செயலிகள் அல்லது வலைத்தளங்களில் வழங்கப்பட்டுள்ள தொடர்பு விவரங்களையும் நீங்கள் பார்க்கலாம்.

ஆம், தேவைப்பட்டால் உங்கள் தொடர்பு வங்கி மூலம் செயலிழக்கச் செய்யக் கோரலாம்.